போலீசார் ஆய்வு
தொட்டியம் பெரிய வாய்க்கால் கரை அருகே முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சாராயம் காய்ச்சியவர் கைது
அப்போது,அங்கு உள்ள கொடிக்கால் பகுதியில் சாராயம் காய்ச்சிய தொட்டியம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் என்பவரை பிடித்து கைது செய்தனர்.
சாராய ஊறல் அழிப்பு
மேலும் அங்கு இருந்த 100 லிட்டர் சாராய ஊறலையும் கைப்பற்றி அழித்தனர்.