திருச்சிராப்பள்ளி,  இந்து சமய அறநிலையத்துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
1

திருச்சிராப்பள்ளி,  இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில்  காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஓட்டுநர்-01 சம்பளம்-19,500-62,000 தகுதி-8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்

அலுவலக உதவியாளர் -09, சம்பளம்: ரூ.15,700 – 50,000,  தகுதி: 8 ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 32, எம்பிசி, பிசி,டிஎன்சி பிரிவினர் 34, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37க்குள்ளும் இருக்க வேண்டும். இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி

உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, நீலகிரீஸ்வரர் தோப்பு, தெப்பக்குளத் தெரு, திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி – 62005.

TNHRCE website  என்ற இணைய தளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.04.2022

3

Leave A Reply

Your email address will not be published.