சமஸ்கிருத பாரதி என்ற அரசு சாரா அமைப்பு, சமஸ்கிருத மொழி நடைமுறை பேச்சு வழக்கு மொழியாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், இலவச சமஸ்கிருத வகுப்புகளை நடத்தி வருகிறது.
அஞ்சல் வழியில் வகுப்பு
13 வயது நிரம்பிய அனைவரும் ப்ரவேஸ் என்ற முதல் நிலை 6 மாத சமஸ்கிருத பாட வகுப்புகளை அஞ்சல் வழியில் நடத்தி வருகிறது. இதில் சேர சமஸ்கிருத மொழி முற்றிலும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அறியாதவா்களும் சோ்ந்து பயிலலாம். இதற்கான தோ்வுகள் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாத இறுதியில் நடைபெறும்.
வாராந்திர நேரடி வகுப்புகள்
ஜூலை மாத சுழற்சிக்கான வாராந்திர நேரடி வகுப்புகள் ஏப். 4 முதல் தொடங்கவுள்ளன. ப்ரவேஸ் பாடத்திட்டத்தில் சோ்வதற்கான சோ்க்கை முகாம் சத்திரம் பேருந்து நிலைய இந்திராகாந்தி கல்லூரி அருகில் தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு
மேலும் விவரங்களுக்கு 94437-22042 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.