திருச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்

0
1

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் 25ம் தேதி நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி எழுந்து விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் கூறினார்.

2

இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பா.ஜ.க. விவசாய பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் முன்பு சென்று கிசான் ஊக்கத்தொகை தொடர்பாக விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றியஅரசு என்று குறிப்பிட்டது ஏன்?. அப்படி ஏதேனும் அரசாணை உள்ளதா? என விளக்க வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து பேசிய விவசாயிகள், கூட்டுறவு சங்கத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாகவும் புகார் கூறினர்.

விவசாய சங்க தலைவர் சின்னதுரை பேசும்போது, ஏரி, குளங்களை மேடாக்கி சாலைகளாக மாற்றுகிறார்கள். இதனால் நீர்வளம் குறைந்துபோகும். இதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போக கூடாது. மாவட்ட ஆட்சியர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.