திருச்சி அருகே கலவை எந்திர வாகனம் மோதிய முதியவர் பலி

0
1

கான்கிரீட் தடுப்பு சுவர்

திருவெறும்பூரையடுத்த வேங்கூர் குவளபாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்காக கான்கிரீட்  கலவை எந்திரவாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அதேஊரை சேர்ந்த சாம்பசிவம் (70) என்பவர் தனது  வயலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தார்.

முதியவர் பலி

2

இவர் வருவதை கவனிக்காமல் கலவை எந்திர வாகனம் பின்னோக்கி வந்து சாம்பசிவம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

போலீசார் விசாரணை

அங்கிருந்த பொதுமக்கள் கலவை எந்திர வாகனத்தை அடித்து உடைத்தனர். தகவல் அறிந்து, திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  பொதுமக்களை சமாதானப்படுத்தியதுடன், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கலவை எந்திர டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி (27) என்பவரை கைது செய்தனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.