திருச்சியில் உம்பளச்சேரி இன மாடுகள் குறித்த சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

0
1

உம்பளச்சேரி இன மாடுகள் குறித்தஅஞ்சல் அட்டைகளை வெளியீட்டு விழாவில்,  திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் வரவேற்று அஞ்சல் உறைகளை வெளியிட்டார். விழாவுக்கு திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் தலைமையில் வகித்தார்.  இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாகை மாவட்ட கலெக்டர் டாக்டர்.அருண் தம்புராஜ் அஞ்சல் அட்டைகளை  பெற்றுக்கொண்டார்.

உம்பளச்சேரி இன மாடுகள்

தற்போது டெல்டாவில் பிரசித்தி பெற்ற உம்பளச்சேரி நாட்டு இன மாடுகள் அழிந்து வரும் நிலையில், அதனை மீட்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உம்பளச்சேரி இன மாடுகள் குறித்த அஞ்சல் உறை மற்றும் கண்காட்சி தொடர்பான சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களாகிய நீங்கள் நேர்மையாக இருந்தால் இலக்கை எளிதில் அடையலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் டாக்டர்.அருண் தம்புராஜ் பேசினார்.

2

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பங்கேற்பு

விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள், பட்டுக்கோட்டை பகுதி விவசாயிகள், திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.