திருச்சி, துறையூரை அடுத்த சிறுப்பத்தூர் ஏரி கரைகளில் 100-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. அவற்றில் 5 பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர்.
மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதை அறிந்த பொதுமக்கள் அங்கு கூடினர். உடனே மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பனைமரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.