திருச்சி அருகே 30 ஆண்டுகாலஆக்ரமிப்பில் இருந்த நிலங்கள் மீட்பு  

0
1

திருச்சி அருகே 30 ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்த 120 ஏக்கர் நிலத்தை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம்

திருச்சி , திருவெறும்பூர் தாலுகா,திருநெடுங்குளம் ,தேவராயநேரி உட்கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் 265 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் நீர் ஆதாரம் இருக்கிறது.

2

இதன் மூலம் சுமார் 550-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவராயநேரி கிராம ஏரியை புதுக்குடி, திருவிழா பட்டி, தேவராய நேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  90-க்கும் மேற்பட்டோர் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தேவராயநேரி நரிக்குறவர் காலனிபகுதியை சேர்ந்த மக்களுக்கு சுமார் 10 ஏக்கர் நிலம் குடியிருக்க பட்டா போட்டு வழங்கப்பட்டது.

மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

ஏரி நிலத்தில் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க, தேவராயநேரியை சேர்ந்த கருப்பசாமி, ஐகோர்ட்டு மதுரை கிளையில் கடந்த 2021-ம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என ஐகோர்ட் சட்டம் உள்ளதால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி மதுரை ஐகோர்ட்டு கிளை சமீபத்தில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தேர்தல் மற்றும் மழைக்காலம் என்பதால் காலதாமதம் ஆனது,  மறுபடியும் கருப்பசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளையில் மீண்டும் தொடர்ந்தார்.

120 ஏக்கர் நிலம் மீட்பு

இந்த நிலையில் 22ம் தேதி திருச்சி ஆற்று பாதுகாப்புக் கோட்ட நீர்வள பாதுகாப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் சார்பில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் சீர்திருத்தப்பட்டும், மரங்கள் அகற்றப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்களால் 120 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது. ஏரி இருந்த இடத்தில், ‘‘இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வள ஆற்றுப்பாசன இடம்’’ என்ற  பதாகையும் வைக்கப்பட்டது.

காவலர்கள் குவிப்பு

மேலும் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.