திருச்சி, தொட்டியபட்டியில் புகழ்பெற்ற பாம்பாலம்மன் கோவில் திருவிழா

0
1

திருச்சி வளநாடு, கோவில்பட்டி தொட்டியபட்டியில் பிரசித்தி பெற்ற பாம்பாலம்மன் கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் இக்கோவிலில் திருவிழா நடைபெறும். அதுபோல் 15ம் தேதி உறுமி சப்தம் முழங்க புல்லுரணி கரைக்கு ஊர் மக்கள் சென்று பின்னர் அங்கு கரகம் பாலித்து அங்கிருந்து அம்பாள் கோவிலை அடைந்தனர். அப்போது  வாணவேடிக்கைகள் நடந்தது.

நள்ளிரவில் ஆயிரக்கணக்கானோர் கோவில் முன்பு பொங்கல் வைத்தும், சேவல் பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

2

16ம் தேதி மாலை காளைகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு வழிபாட்டிற்கு பின் கோவில் அருகே உள்ள திடலில் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேவராட்டம் நடைபெற்றது.

16ம் தேதி ஆலயத்தில் இருந்து கரகம் புறப்பட்டு புல்லூரணி தெப்பத்தில் விடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.