துறையூா்,கீரம்பூரில் கடந்த14 நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த போது அதிகாரிகள் 176 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்தனா். அடுத்தநாள் (15ம் தேதி) நெல் கொள்முதல் செய்ய டோக்கன் பெற்றவா்களும், நெல்லை எடுத்துச் சென்றவா்களும் திறந்தவெளியில் தங்களது நெல்லை கொட்டி விட்டு அதிகாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்காக காத்திருந்தனா்.
அதிகாரிகள் வரத் தாமதம் ஆகவே அதிருப்தியடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு தகவலளித்தனா். இதையடுத்து மாலை 5.30 மணிக்கு கீரம்பூா் வந்த அதிகாரிகள் 100 மூட்டை நெல்லைக் கொள்முதல் செய்தனா். நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் ஆா்வமின்றி இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.