திருச்சியில் வரதட்சணை கொடுமையால் பெண் வயிற்றில் இருந்த சிசு இறப்பு

0
1

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெரு பகுதியை சேர்ந்த மேனகாதேவி (29). இவர்திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது மேனகாதேவி கர்ப்பமாக உள்ளார்.

இந்தநிலையில், மேனகாதேவியிடம் கணவர் ரவிக்குமாரும், மாமியார் சத்யாவும்(47) இருவரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

2

மேலும் ரவிக்குமார், மேனகாதேவியை இரும்பு கம்பியால் தாக்கியதால், தற்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். அந்த சிசு இறந்துவிட்டது.

இதுகுறித்து மேனகாதேவி பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் விசாரணை நடத்தி ரவிக்குமார், சத்யா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.