திருச்சி, தா.பேட்டையில், தனியார் பஞ்சு அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி காய்ந்த சருகுகள், செடிகளில் மளமளவென பரவியது.
உடனே அப்பகுதியினர் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகே இருந்த பஞ்சு மில் தப்பியது. இல்லையெனில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.