திருச்சி எல்.ஐ.சி.காலனியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார்.
நேற்று இரவு 8 மணி அளவில் அவருடைய வீட்டில் இருந்த மின்சாரம் சேமிக்கும் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் மற்றும் அட்டை பெட்டிகள், சில சாமான்கள் தீப்பிடித்து வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே. மின்ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்ததுடன், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனர்.
பிறகு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை வெளியே கொண்டு வந்து வைத்தனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.