திருச்சியில் காவலாளியின் கையை கடித்த பெண் அதிகாரி

0

திருச்சி, ஏர்போர்ட் அருகே தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை போக்குவரத்து அலுவலகம் உள்ளது.

அங்கே கரூர் அரவக்குறிச்சியை சேர்ந்த பாலகுமார் (26) என்பவர் காவலாளியாக உள்ளார். இவர் விடுமுறை கேட்டு கண்காணிப்பாளர் அறைக்கு சென்றுள்ளார். அங்கே கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த்துக்கும், அதே அலுவலக, பெண் அதிகாரியான ராதிகா என்பவருக்கும் இடையே தகராறு நடந்து கொண்டிருந்தது.பாலகுமார் இதனை விலக்க முயன்றார்.

கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், பாலகுமாரிடம் தனது செல்போனை கொடுத்து தகராறை வீடியோ எடுக்கும்படி கூறியுள்ளார். இதனைப் பார்த்த ராதிகா பாலகுமாரிடம் செல்போனை பறிக்க முயன்றார். அவரால் செல்போனை பறிக்க முடியாததால் காவலாளியின் கையை கடித்துள்ளார்.

இதில் காயம் அடைந்த  பாலகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் ராதிகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.