திருச்சி, வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில்  தேரோட்டம்

0
1

திருச்சி, மணப்பாறை, வீரப்பூரில் உள்ள கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழாவில் பெரியகாண்டியம்மன் கோவில்  தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது.

பெரியகாண்டியம்மன் கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு பூஜையுடன் சாம்புவன் காளை முரசு கொட்டி முன் செல்ல, திரளான பக்தர்கள் தேரை, வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் சென்ற இடங்களில் எல்லாம் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த தானியங்களையும், பக்தர்கள் மலர் மாலைகளையும் அம்மனிடம் வைத்து பயபக்தியுடன் வணங்கினர். மதியம் 12.40 மணியளவில் புறப்பட்ட தேர், மதியம் 1.35 மணியளவில் கோவிலை சுற்றி நிலையை அடைந்தது.

3

Leave A Reply

Your email address will not be published.