திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து

0

திருவெறும்பூர் துவாக்குடியை சேர்ந்த ராஜ்குமார்(28). இவரும், இவரது நண்பர் விஜய்யும் 2 தினங்களுக்கு முன், இரவு துவாக்குடி அருகே உள்ள கருப்பு கோவிலின் பின்புறம் மது அருந்திவிட்டு, அந்த வழியே சென்ற குட்லு(24) என்பவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டினார்.

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கருப்பையா(32) என்பவர் ராஜ்குமாரின் கையில் இருந்த கத்தியை பறித்து, அவரது கழுத்து மற்றும் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக ராஜ்குமாரை கருப்பையா கத்தியால் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.