ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவர் ராஜாராம். இவரது கைப்பேசிக்கு வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்ற குறுஞ்செய்தி வந்தது.
இதை நம்பி,அதற்கான லிங்கை கிளிக் செய்து, தனது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால் அவர் பதிவு செய்த சில மணி நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 35,999 திருடுபோனது.
உடனே இதுகுறித்து அவா் திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீசில்புகார் செய்தார். அதன்அடிப்படையில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, துரிதமான முறையில் அந்தப் பணத்தை மீட்டு ராஜாராமின் வங்கிக் கணக்கில் செலுத்தினா் திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீசார்.