திருச்சி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை

0
1

திருச்சி வளநாடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(56). முன்னாள் ராணுவ வீரரான இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு அறுக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் மற்றும் 24 பட்டுப் புடவைகள் கொள்ளை போயிருந்தது கண்டுஅதிர்ந்த அவர், வளநாடு போலீசாரிடம் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2

இதே வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு 5 பவுன் நகைகள் திருட்டு போனநிலையில் தற்போது இரண்டாவது முறையாக 25 பவுன் நகைகள் கொள்ளை போயுள்ளன மேலும், அருகே உள்ள மற்றொரு வீட்டிற்குள்ளும் சென்ற கொள்ளையர்கள் புக முற்பட்டபோது,அங்கு ஆட்கள் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.