வரும் 19ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

0
1

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

13-ந் தேதி, நம்பெருமாள் தங்க கருட வாகனத்திலும், 14-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

தாயார் சேர்த்தி சேவை

2

பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு காவிரிக்கரையை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருந்து நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது.

தேரோட்டம்

18-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நம்பெருமாள்-ரெங்கநாச்சி தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. இந்த சேர்த்தி சேவை 18-ந் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் (19-ந் தேதி) அதிகாலை வரை கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்த சேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

 

3

Leave A Reply

Your email address will not be published.