திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

0
1

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பெருமாள்மலை செல்லும் வழியில் உள்ள திருமண மண்டபத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக மணவறை அலங்காரம் செய்ய  திருச்சியை சேர்ந்த சரத்(24) சென்றார்.

மணவறை அலங்காரத்திற்கு தேவையான இரும்பு குழாயை எடுத்து மண்டபத்திற்குள் செல்ல முயன்றபோது மண்டபத்தின் வெளியே உள்ள உயர்வழுத்த மின் கம்பி மீது இரும்பு குழாய் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

தகவல் அறிந்த துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று சரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

2

பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைப்பதற்காக சரத்தின் குடும்பத்தாரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

அதனை பெற்றுக்கொண்ட அவர் மேலும் பணம் கேட்டுள்ளார். இதனால் சரத்தின் குடும்பத்தினர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அதிகாரிகள் விசாரணை நடத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.