லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்ட முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

0
1

பங்குனி தேரோட்ட நிகழ்வுகள்:

11-ம் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடு, இரவு 7 மணிக்கு பூத வாகனம், அன்ன வாகனம் புறப்பாடு, 12-ந் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடு, இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது.

13-ந் தேதி மதியம் கைலாச வாகனம், சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு திருவீதி உலாவும், 14-ந் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், மதியம் 12 மணிக்கு சோமாஸ் கந்தருக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

2

15-ந் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடைபெற உள்ளது. 16-ந்தேதி மதியம் பல்லக்கு குதிரை வாகனம், இரவு 7 மணிக்கு வீதி உலாவும் நடைபெற உள்ளது.

17-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.