திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோயிலில் பூச்சொரிதல் விழா

0
1

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் மகிமையை சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதக்கூடிய தலம். பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்பவள் மகாசக்தியான சமயபுரம்அம்மன்.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே வருடந்தோறும் மாசி மாத கடை ஞாயிறு முதல், பங்குனி மாதகடை ஞாயிறு வரை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருக்கிறாள். இது இந்த கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்

இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது.

2

அதன்படி இந்த ஆண்டுக்கான  பூச்சொரிதல் விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.