திருச்சி திருவெறும்பூர் திருநெடுங்குளம் பகுதியில், சுங்கச்சாவடி அருகே தனது அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் சக்திவேல்(48).
06ம் தேதி இரவு ரியல் எஸ்டேட் அலுவலகத்தின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூ.25 ஆயிரம், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர் துவாக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.