சென்னையை சேர்ந்தவரின் பண்ணை தோட்டம் திருச்சி-கல்லணை சாலையில் சாய்பாபா கோவில் எதிரே உள்ளது. இதன் மேற்பார்வையாளராக திருச்சியைச்சேர்ந்த ஜோசப் வல்லவராஜ்(50) இருக்கிறார்.
சம்பவத்தன்று பண்ணை தோட்டத்தில் ஒரு பெண்ணுடன் ஜோசப் வல்லவராஜ் தனியே இருந்துள்ளார்.
இதனை பயன்படுத்திக்கொண்டு அந்த தனது நண்பர்களான லால்குடி ஆதிகுடியைச் சேர்ந்த ராஜா(27), வடக்கு காட்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சபரி(28), கொடிக்கால் பகுதியை சேர்ந்த சசிகுமார்(20), சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(30), தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த கவின் குமார்(21) ஆகியோரை தொடர்பு கொண்டு ஜோசப் வல்லவராஜை கடத்தி பணம் பறிக்குமாறு கூறியுள்ளார்.
அதனால் அந்த 5 பேர் வல்லவராஜை வாயில் துணி வைத்து கடத்திச் செல்கையில் நேற்று முன்தினம் லால்குடி அருகே வந்தபோது, அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினர். சந்தேகம் அடைந்த போலீசார் 5 பேர் கும்பலை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் லால்குடி சென்று ஜோசப் வல்லவராஜ் மற்றும் அவரை கடத்தி சென்ற 5 பேர் கும்பலை கைது செய்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.