திருச்சி சமயபுரம் அருகே சாலைவிபத்தில் வாலிபர் பலி

0
1

திருச்சி சமயபுரம் நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்(28). கட்டிட தொழிலாளி. அவர் தனது நண்பர்களான கரண் (18), முரளி(17) உடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி வந்து கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை கரண் ஓட்ட, மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். நெ.1 டோல்கேட் அருகே பழூர் வந்தபோது பெட்ரோல் பங்கிற்கு செல்ல திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயல்கையில் சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், வெற்றிவேல் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கியதால் டயர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

2

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் க்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான வெற்றிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, நெய்தலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகுமார் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.