அரியலூர் அகழாய்வில் கிடைத்த தங்கக்காப்பு

0
1

மத்திய தொல்லியல் துறையின் அனுமதியின் பேரில் , கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இரண்டாம் கட்ட அகழாய்வில், அரியலூா் , கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் எடை 7.920 கிராம்,  4 மி.மீ. தடிமன். இங்கு தோண்டி எடுக்கப்பட்ட முதல் காப்பர் மற்றும் தங்கம் கலந்த ஆபரணம் இது.

தற்போது 10-க்கு 10 என்ற சதுரஅடி அளவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு அரண்மனையின் சுற்றுச்சுவா், இரும்பிலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன.

2

இந்த அகழ்வாராய்ச்சியில், சீன நாட்டில் பயன்படுத்தப்படும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.  இதிலிருந்து இந்தியா – சீனா இடையே வர்த்தகம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.