மன அழுத்தத்தை போக்குவதற்கான உணவு முறைகள்

0
1

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வேகமாகவும் பரபரப்பாகவும் ஓடுகிறது அனைவரின் வாழ்க்கை. அதன் விளைவையும் தாக்கத்தையும் நம்மில் பல பேர் உணராவிட்டாலும் கூட, நம் உடலில் உண்டாகும் பல உடல்நல கோளாறுகளுக்கு இதுவே முக்கிய காரணமாக விளங்குகிறது.

நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, மாணவராக இருந்தாலும் சரி அல்லது சும்மா இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவிலான மன அழுத்த காரணக்கூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணக்கூறுகள் நாளுக்கு நாள் உங்கள் வாழ்க்கையில் அதிகரித்து கொண்டே தான் போகும்.

ஒரு கட்டத்தில் அதனை சமாளிக்க முடியாமல் நாம் திண்டாத தொடங்கி விடுவோம். ஆனால் மன அழுத்தத்தை நீக்க ஆரோக்கியமான பல உணவுகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அவைகளை உட்கொண்டால் மன அழுத்தம் நீங்கி உங்கள் மனநிலை சற்று நிம்மதி பெருமூச்சு விடும்.

2

தேவையில்லாத மன அழுத்தங்கள் உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி விடும். நீங்கள் எவ்வளவு தான் அமைதியாக இருந்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாலும் கூட, உங்கள் ஆழ் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஓடிக் கொண்டே தான் இருக்கும்.

இது உங்களுக்கு பல உடல்நல கோளாறுகளை உண்டாக்கி விடும். முதலில் எந்த பாதிப்பும் தெரியாவிட்டாலும் கூட நாட்கள் ஓட ஓட உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் கெட்டு போய் விடும். அதனால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு மன அழுத்தத்தை வெல்வது அவசியமாக உள்ளது.

மன அழுத்தத்தை நீக்கும் உணவுகளை பற்றி தெரிந்து கொண்டால் உங்கள் மன அழுத்தத்தை சுலபமாக அடக்கி விடலாம். நம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி அமைதியாக வாழ நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி வகையை பின்பற்றுவோம். சிலர் ஜங்க் உணவுகள் உண்ணுவதை நிறுத்துகிறார்கள் என்றால் இன்னும் சிலர் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதனால் அவரவருக்கு எது உகந்ததாக இருக்குமோ அதனை பின்பற்றிக் கொள்ளலாம்.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்டில் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் மெக்னீசியம் உள்ளதால் அது உங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் அதிசயத்தை நிகழ்த்தும். உங்கள் மன அழுத்ததை போக்கிட உங்களுக்கு பிடித்த டெசெர்ட் அல்லது பாலுடன் ஒரு அவுன்ஸ் மதிப்பிலான டார்க் சாக்லெட்டை உண்ணலாம்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழங்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் Cசிஅடங்கியுள்ளதால், அவை இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உங்கள் தினசரி உணவுகளில் கொஞ்சம் ஆரஞ்சு பழங்களை சேர்த்துக் கொண்டால் டென்ஷன் இல்லாமல் நிம்மதியுடன் இருக்கலாம்.

பாதாம்

உங்களுக்கு நட்ஸ் வகைகளை உண்ணுவதில் அலாதி பிரியமா? அப்படியானால் மன அழுத்தத்தை எதிர்த்து போராட பாதாம் வகை நட்ஸை உட்கொள்ளலாம். அவை உங்களுக்கு வைட்டமின் சி மற்றும் ஈ, ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றை அளிப்பதால் பாதாம் உடலில் உள்ள இயக்க உறுப்புக்களுக்கு எதிராக போராடும்.

செரில்/ கார்ன் ப்ளேக்ஸ்

செரில் அல்லது கார்ன் ப்ளேக்ஸை ஒரு கிண்ணத்தில் பாலுடன் கலந்து உட்கொண்டால், மன அழுத்தத்திற்கு எதிராக உங்கள் உடலை அது போராட வைக்கும். ஏனெனில் இவ்வகை உணவுகளில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ளதால், உங்கள் மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உணவாக இது விளங்குகிறது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி பழங்களில் மாங்கனீசு, மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளதால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இதுவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இதனை தொடர்ச்சியாக உட்கொண்டால், உங்கள் உடல் எடையை குறைத்து, மன நிலையை கட்டுப்படுத்துவதோடு, மன அழுத்தத்தை எதிர்த்தும் போராடும்.

கீரைகள்

ஆரோக்கியமான பச்சை கீரைகள் உங்கள் மன அழுத்தத்தை எதிர்த்து போராட பெரிதும் உதவும். இந்த ஆரோக்கியமான உணவில் அதிமுக்கிய வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளதால் தேவையில்லாத மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

மீன்

ஒமேகா 3 கொழுப்பமிலம் நிறைந்துள்ள சால்மன், டூனா அல்லது கானாங்கெளுத்தி வகை மீன்கள் மன அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவும். ஆகையால் இவ்வகை மீன்களை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை உட்கொண்டு மன நிறைவோடு இருக்கலாம்.

குறிப்பு

மன அழுத்தத்துடன் போராட எவ்வகை சிறந்தது என்பதை தெரிந்து கொண்டால் அது பெரிதும் உதவியாக இருக்கும். நீங்கள் டயட் திட்டத்தை கடைப்பிடித்து வந்தால், அதனுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவுகளையும் உட்கொண்டு வந்தால், மன அழுத்தத்தை எதிர்த்து நீங்கள் போராட தொடங்கி விட்டீர்கள்.

அப்படி இல்லையென்றால் இன்றே ஆரம்பியுங்கள். உங்கள் டயட் திட்டத்தை மாற்றி அமைத்து அதில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேவையற்ற மன அழுத்தத்தை விரட்டி அடியுங்கள்.

 

3

Leave A Reply

Your email address will not be published.