சுற்றுச்சூழலை பாதுகாக்க “இல்லம் தேடி துணிப்பை” விழிப்புணர்வு நிகழ்வு 

0
1

சுற்றுச்சூழலை பாதுகாக்க “இல்லம் தேடி துணிப்பை” விழிப்புணர்வு நிகழ்வு 

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகளுடன், உறுதி மொழி எடுத்துக் கொண்ட வகையில் “இல்லம் தேடி துணிப்பை ” என்ற விழிப்புணர்வு நிகழ்வு பொங்கல் நாள் முதல் துவங்கப்பட்டது .

மண்வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, நெகிழி பைகளை ஒவ்வொரு தனி நபரும் எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என சிறு முயற்சியை “இல்லம் தேடி துணிப்பை” கொடுத்து விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

2

காய்கறி, மளிகை பொருள்கள், பழங்கள் வாங்க செல்லும் போது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை கொண்டு செல்லவும், மற்றும் மீன் , இறைச்சி, டீ, காபி, பழச்சாறு, வாங்க செல்லும் போது ஒரு பாத்திரத்தை கொண்டு செல்லவும், மேலும் வாகனத்தில் எப்போதும் ஒரு துணி பையை வைத்து கொள்ளுங்கள் போன்ற அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க, “நெகிழியை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” வருங்கால சந்ததிகளை நலவாழ்வு வாழ வழி செய்வோம். முதலில் நாம்மாறுவோம், துணிப்பையை எடுப்போம். என்று கூறி “இல்லம் தேடி துணிப்பை ” திட்டத்தை தொடந்து வீடுகள், விளையாட்டு அரங்கள், பள்ளிக்கூடங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு , சென்று துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கி முதலில் மே.க.கோட்டை , ரயில்வே பொன்மலை மைதானம் பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர், தண்ணீர் கே.சி. நீலமேகம், சாமி தற்காப்புக்குமு நிறுவனர் து. ஜீவானந்தம் , சு. பூரணஸ்வரன், மா.நரேஷ் , சி.சேகர், என்.வெங்கடேஷ், தயானந்த், , சாதனாஸ்ரீ , மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.