முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுயதொழில் மேலாண்மை கருத்தரங்கம்

0
1

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுயதொழில் மேலாண்மை கருத்தரங்கம்

முசிறியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைந்து 3 நாள் கருத்தரங்கை நடத்தியது.

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கினை கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் தலைமை ஏற்று துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர்கள் செந்தில்குமரன், ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2

கருத்தரங்கில் சுற்றுச்சூழல் மேலாண்மை, அன்றாட வாழ்வில் அறிவியல், அறிவியல் உபகரணங்களை பயன்படுத்துவது எவ்வாறு, மண்புழு உரம் தயாரித்தல், சிப்பிக் காளான் வளர்த்தல், கலர் மீன்கள், மாடி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளை பேராசிரியர்கள் மருதைவீரன், பாலச்சந்திரன், ராஜ்குமா,ர் சுந்தரராஜன், திருமலைவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் அரசு பள்ளி மாணவர்கள் சுய உதவி குழு பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியில் பேராசிரியை தீபா நன்றி கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.