திருச்சியில் தொழில்முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

0
1

திருச்சியில் தொழில்முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute, Chennai) மற்றும் திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் (Tiruchirapalli District Tiry and Small Scake Industries Association) இணைந்து இணையவழி கருத்தரங்கம் (WEBNAR) நாளை (12.01.2022) புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 மணிவரை தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் ( Entrepreneurship Awareness Camp ) நடைபெற உள்ளது.

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட தொழில் துறையில் ஆர்வமிக்க மற்றும் ஏதேனும் தொழிலில் அடிப்படை பயிற்சி பெற்ற ஆண் / பெண் அனைவரும் இந்த முகாமில் அரசு விதிகளின் அடிப்படையில் முககவசம் சமூக இடைவெளி கடைபிடித்து முன்பதிவு செய்து இலவசமாக கலந்து கொள்ளலாம் .

2

சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள் , தொழில் வாய்ப்புகள் தொழிலை தெரிவு செய்வது எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்பட உள்ளது.

தொழில்முனைவோர்களுக்கு தொழில் வணிக வடிவம் (Business model) மற்றும் திட்ட அறிக்கை (Business Plan) தயாரித்தல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும் தருதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

இம்முகாமில் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையமும் டிடிட்சியாவும் இணைந்து செயல்படும் அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் எடுத்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் 0431-2440119 / 9659558111 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளவும் அல்லது https://forms.gle/YLnGmEr9vMBcipH4Aணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.