திருச்சியில் 5 இலட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்

0
1

திருச்சியில் 5 இலட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் போலி மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதன்பேரில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு முத்தரசு தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு இருங்களூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்சுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 90 அட்டைப் பெட்டிகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4,310 போலி மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

 

2

போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்ஸ், குப்புசாமி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்த போலி மதுபானங்களை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்பேரில், சிறுகனூர் அருகேயுள்ள தச்சங்குறிச்சி வனப்பகுதியில் கொட்டி அழிக்கப்பட்டது. அதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் வனப்பகுதியில் ஓரிடத்தில் குழி தோண்டப்பட்டது.

திருச்சியில் 5 இலட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்

பின்னர், திருவெறும்பூர் மதுவிலக்கு துணை சூப்பிரண்டு முத்தரசு, திருச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் மேற்பார்வையில் பாட்டிலில் இருந்த போலி மதுபானங்கள் குழியில் கொட்டி அழிக்கப்பட்டது. மதுபான காலி பாட்டில்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.