திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா         

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா         

திருச்சி தூய வளனார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாக உலக பிரெய்லி தினம் கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர்,சே.ச. தலைமையேற்றார். தம் உரையில் ஜனவரி 4 உலக பிரெய்லி தினம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் விழாவாக நடைபெறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கல்லூரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இதைப்போல பல நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனத் தாம் விரும்புவதாகத் தம் உரையில் பதிவு செய்தார். இணைமுதல்வர் முனைவர் வி.அலெக்ஸ் ரமணி வாழ்த்துரையாற்றினார். உயிா் அறிவியல் புலத்தலைவர் முனைவர். சகாய சதீஸ் முன்னிலை வகித்தார்.

 

2

திண்டுக்கல் பசுமை வானொலியின் முதன்மை தகவல் ஒருங்கிணைப்பாளர், பட்டிமன்ற நடுவர், குரல் முரசு அ‌.காதர் பாட்ஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பலவீனத்தைப் பலமாக்கு என்னும் மையப்பொருளில் தன்னம்பிக்கை உரையாற்றினார். பிரெய்லி, பீத்தோவன், ஹெலன் கெல்லர் உள்ளிட்ட பல மாற்றுத்திறனாளி ஆளுமைகளின் ஆளுமைப் பண்புகளை மையப்படுத்தி உரையாற்றினார். முன்னதாக தமிழாய்வுத் துறை பேராசிரியர் முனைவர் சி.ஷகிலாபானு வரவேற்புரையாற்றினார். நிறைவில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.முரளி கிருட்டினன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை முனைவர்பட்ட ஆய்வாளர் கி.ஜோஸ் ஆல்வின் தொகுத்து வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி யோடு அமர்ந்து விழாவில் பங்கேற்றனர்.

 ஜோ.சலோ

3

Leave A Reply

Your email address will not be published.