துறையூரில் கதண்டுகள் கடித்த தொழிலாளர்கள் மயக்கம்

0

துறையூரை அடுத்த சிக்கத்தம்பூர்  ஏரிக்கரை பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள மரங்களில் மரங்களில் குரங்குகள்  விளையாடிக்கொண்டிருந்த நிலையில், நாய்கள் குரங்குகளை விரட்ட,  பயத்தில் குரங்குகள் அங்கிருந்த கதண்டுகளின் கூட்டை கலைத்தன. கதண்டுகள் அங்கு பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்தன.

இதில் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்ததுடன் சிலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.  உடனே அவர்கள் துறையூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டதுடன், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.