திருச்சியில் கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

0
1

திருச்சி தெற்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (57). திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவர் 4 ஆண்டுகளாக வேலைக்கு செல்லவில்லை.

அவரது மனைவி மகாலட்சுமி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

அவர் தனது குடும்பத்துக்கு பாரமாக இருப்பதாக அடிக்கடி புலம்பி வந்தார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் அவரது  மனைவி வேலைக்கு சென்ற பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

2

அவரது மகன் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு வந்தபோது  வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் ஹரிகிருஷ்ணன் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைத்தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

3

Leave A Reply

Your email address will not be published.