
திருச்சி பொன்மலைப்பட்டியைச்சேர்ந்த சூரியபிரகாஷ் (23). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஒன்றைரை வருடங்களுக்கு முன் காதலித்து பின் கைவிட்டாராம். அதனால் கர்ப்பம் ஆனார். ஆனால் சிறுமி தான் கர்ப்பம் ஆனாதை மறைத்து வந்துள்ளார்.
கடந்த 23-ந் தேதி அச்சிறுமி தனது வீட்டின் கழிவறையில் ஆண் குழந்தை பெற்றெடுத்ததுடன் மயங்கி கீழே விழுந்துள்ளார். பதறிய பெற்றோர் மகளை மீட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்கம் தெளிந்தவுடன் அச்சிறுமியை ஆஸ்பத்திரி டாக்டர்கள் விசாரித்தபோது, சிறுமிக்கு தற்போது 17½ வயது என்றும், திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்ததையும் அறிந்து பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அஜீம், வாலிபர் சூரியபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
