
திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (76). இவர் தையல் எந்திரம் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தையல் எந்திரம் பழுது பார்க்க சென்றார். அங்கு மாலை வரை இருந்து தையல் எந்திரம் சரி செய்து கொடுத்துவிட்டு வந்த அவர் மறுநாளும் அங்கு சென்று யாரும் இல்லாததை உறுதி செய்து விட்டு அங்கிருந்த பதினொன்னரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி கத்தவே அருகே கடைக்கு சென்றிருந்த அவரது தந்தை அவரைப்பிடித்து பொன்மலை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பொன்மலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல்அருள்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவத்சன் கடந்த 28ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில், ஜெயராமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், சிறுமிக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
