மண்ணச்சநல்லூா் கவுண்டம்பட்டியைச் சோ்ந்த சேகா் (37). திருச்சிதையலகம் ஒன்றில் வேலைசெய்து வந்தார்.
25ம் தேதி வேலையை முடிந்துவிட்டு, அரசுப் பேருந்தில் ஊருக்குச் சென்றார். பேருந்து கவுண்டம்பட்டி அருகே நெருங்கும்போது, பேருந்திலிருந்த சேகா் நிலைத் தடுமாறி படிக்கட்டிலிருந்து கீழே விழுந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.