வரும் 30ம் தேதி மண்ணச்சநல்லூா் பகவதியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா தொடக்கம்

0
1

மண்ணச்சநல்லூர் பகவதியம்மன் திருக்கோயிலின் 121-ஆவது ஆண்டுத் திருவிழா டிசம்பா் 30-ஆம் தேதி தொடங்கி, 2022, ஜனவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வியாழக்கிழமை அம்பாளுக்கு ஆவாஹன பூஜை , தொடா்ந்து டிசம்பா் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை பகவதியம்மன், பத்மாவதி, ஆதிபராசக்தி, ராஜ ராஜேசுவரி, வெண்ணைத்தாழி கிருஷ்ணா், காமாட்சி, வளைகாப்பு அம்மன், தனலட்சுமி, அன்னப்பூரணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பார்.

ஜனவரி 9-ஆம் தேதி இரவு கம்பத்தடி அடசல் பூஜையுடன் விழா நிறைவு பெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூா் வணிக வைசியா் சங்கத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனா்.

3

Leave A Reply

Your email address will not be published.