திருச்சி என்.ஐ.டியில் ஊடக வெளியீடு மற்றும் ஆசிரியர் மேம்பாட்டு  நிகழ்ச்சி

0
1

என்.ஐ.டி திருச்சி ஊடக வெளியீடு மற்றும் அழைப்பிதழ்- ஆசிரியர் மேம்பாட்டு 
நிகழ்ச்சி 2021 டிசம்பர்  27-31 இல் நடைபெறவுள்ளது

ஏ.ஐ.சி.டி.இ இன் கற்பித்தல் மற்றும் கற்றல் திட்டத்தின் கீழ்,
இந்த ஐந்து நாள் நிகழ்ச்சியானது, உங்கள் கையெழுத்து உங்கள்
அடையாளம்(முதன்மையாக பெண்களுக்கானது) என்னும் தொனிப் பொருளைக் கொண்ட
,வாழ்க்கைத் திறன்கள் மேலாண்மை தொடர்பான (தனிநபர் மேம்பாட்டினைப்
முதன்மையாகக் கொண்டது )  தேசிய அளவிலான ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சித்
ஆகும்.   மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் முனைவர் ஆர்.எல்.
ஜோசபின், முனைவர் எம். வெங்கடகிருத்திகா மற்றும்  முனைவர் எஸ். மகேஸ்வரி
ஆகியோரினால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியானது கீழ்வரும்
கருப் பொருட்களை முதன்மையாகக் கொண்டது.

2

*கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பெண்கள்
*பெண்கள் தொழில்முனைவு
*தொடர்பிணைப்பு மற்றும் கைகோர்த்தலில் பெண்கள்
*அடிப்படைச் சட்டங்கள் மற்றும் பெண்ணுரிமை
*வேலை – வாழ்வு சரிநிலை மற்றும் உடல் ஆரோக்கியம்
*யோகா மற்றும் மன ஆரோக்கியத்தின் ஊடாக சமப்படுத்தப்பட்ட சுயமதிப்பு
*பெண்கள் மற்றும் அரசமைப்பு
*நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெண்கள்

இந்த நிகழ்ச்சியானது 2021 டிசம்பர் 27ஆம் நாளன்று காலை 9 மணிக்கு
நிகழ்நிலையில்  வெப் எக்ஸ் மெய்நிகர்தளத்தில்
தொடங்கி வைக்கப்படும். சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர் இயக்குநர் முனைவர் உஷா
நடேசன்,  கருப்பொருள் தொடர்பான விரிவுரையை நிகழ்த்துவதுடன், பெங்களூரு
இன்டெல் கூட்டமைப்பின் தலைமை பொறியாளர், முனைவர் கிருஷ்ணா பால்,  தொடக்க
உரையை நிகழ்த்துவார். என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் ஜி
கண்ணபிரான்,  தொடக்க நிகழ்வுக்குத் தலைமையேற்பார்.

கல்வி, ஆராய்ச்சி , தொழில்முனைவு, சட்டம், விவசாயம் மருத்துவத்துறை
சட்டம், அரசமைப்பு முதலான பல துறைகளைச் சார்ந்த பேச்சாளர்கள்
அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய மற்றும்
சர்வதேச வல்லுநர்களுள்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிப்
பேச்சாளர்கள் 15 அமர்வுகளைக் கையாள அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்
என்.ஐ.டி திருச்சி முன்னாள் இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ்,
பெங்களூரு சிஸ்கோவின் பொறியியல் மேலாளர் கலைச்செல்வி, ஜீவி அக்ரோ புட்ஸ்
திருமதி சில்வியா,    சர்வதேச துப்பாக்கிச் சுடுநர் , ஐ.சி.எஸ்.கே
இயக்குநர் டி.கே.சரண்யா மற்றும் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி‌.
டிகுரூஸ் , சவீதா மருத்துவக் கல்லூரியின் ஓ.ஜி துறையின் மருத்துவர்
அகன்ஷா சிங் சன்டல் , ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தின் உள்ளக மருத்துவர்
திவ்யா சுகுமார், சுவீடன் வால்வோ பயன்பாட்டு  வல்லுநர் திருமதி விமல்
சுகன்யா, என்.ஐ.டி திருச்சி பேராசிரியர் முனைவர் பிரேமலதா, இந்திய
விமானப் படையின் ஓய்வு பெற்ற தலைமைத்துவ பயிற்சியாளர் பி.பாரதி.
நிகழ்ச்சியின் முழுமையான நேர அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் இடைவெளியில் 15 அமர்வுகளாக, ஒரு நாளுக்கு மூன்று அமர்வுகள்,
ஒவ்வொரு அமர்வும் 90 நிமிடங்கள் என இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
ஏ‌.ஐ‌.சி.டி.இ அடல் தளத்தின் ஊடாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து
122 ஆரம்ப நிலை உதவிப் பேராசிரியர்களும், ஏறக்குறைய 24 இடைநிலை மற்றும்
முதுநிலை பேராசிரியர்களும், பதினோரு அறிஞர்களை உள்ளடக்கிய, பல்வேறு
நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 172 பேர் பங்கேற்கிறார்கள்.

பல்வேறு துறைகளில் பெண்களை வலுப்படுத்தல் மற்றும்
பங்கேற்பாளர்களுக்கிடையே சுய ஊக்குவிப்பு வழங்குதல் என்பவற்றை
நிகழ்ச்சியானது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு துறைசார்ந்த  வல்லுநர்களும்
பேச்சாளர்களாக சிறந்த விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

தொடக்க நிகழ்ச்சிக்கான உரலி
https://bit.ly/atal-lsm-nitt

என்.ஐ.டி திருச்சி சமூக ஊடகப் பதிவு
1.
https://twitter.com/ReachNITT/status/1474769282080796674?t=V06-tL0yQDAgYkSBPiRwZw&s=08

2.https://www.facebook.com/1589203224423877/posts/5166465310030966/

3.https://www.linkedin.com/posts/nittrichy_ministryofeducation-research-teaching-activity-6880533663151460352-_Duz

4.https://www.instagram.com/p/CX6S-K_lUQX/?utm_medium=copy_link

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க

முனைவர் எம். வெங்கடகிருத்திகா இணைப் பேராசிரியர்
தொடர்பு எண்: 9629278427

முனைவர் ஆர்.எல்.ஜோசபின்,உதவிப் பேராசிரியர்,தொடர்பு எண்: 8610804396

மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறை, தேசிய தொழில்நுட்பக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி.

3

Leave A Reply

Your email address will not be published.