திருச்சி பொன்மலை பணிமனையில் மரக்கன்று நடும் இயக்கம்

0
1

திருச்சி பொன்மலை பணிமனையில் மரக்கன்று நடும் இயக்கம்

திருச்சி பொன்மலை பணிமனையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மரக்கன்று நடும் இயக்கம் நேற்று (25.12.21) காலை 11.00 மணிக்கு நடந்தது.

மத்திய பணிமனைகள், தெற்கு ரயில்வே , பொன்மலை பணிமனை ஆகிய இடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

2

இதன் தொடர்ச்சியாக மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில், 2021 ஆம் ஆண்டு வெகுஜன மரத்தோட்டம் திட்டம் தொடங்கப்பட்டு பணிமனைகளில் மாக்கன்று நடும் இயக்கம் நடைபெறுகிறது.

நேற்று அவரது பிறந்த நாளையொட்டி பொன்மலை பணிமனையில் பீமா மூங்கில் கன்று நடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

திசு வளர்ப்பு மூங்கில் வகையான பீமா மூங்கில் என்ற சிறப்பு வகை மூங்கில் அதிக கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி மற்ற தாவரங்களை விட அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

நிகழ்வில் பணிமனை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் , மற்றும் அவர்களின் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.