உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னைப் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 24ம் தேதி இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. . மறை மாவட்ட பங்குத் தந்தை ஆரோக்கியராஜ் பிரார்த்தனை நடத்தினார். இதில் திரளான கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டனர்.