திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை

0
1

திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (30). என்ஜினீயரிங் முடித்து விட்டு திருச்சி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்தார்.அந்த நிறுவனத்தில் அதிகமானோருக்கு கடன் பெற்று கொடுத்ததுடன், தானும்  அதிக கடன் பெற்றுள்ளார்.  கடன் அதிகமாகவே, யாரிடமும் சரியாக பேசாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்23ம் தேதி  காலை, வீட்டின் அருகே தாம்பரத்தில் இருந்து, நாகர்கோவில் நோக்கி சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரன் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.