திருச்சியில் உடற்பயிற்சிகூட மாஸ்டருக்கு வெட்டு

0
1

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த அருண்பாபு(36). திருச்சி கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் மாஸ்டராக இருக்கிறார். அங்கு உடற்பயிற்சி பயில தொழில் அதிபர் ஒருவரின் மகள் தினமும் வந்து கொண்டிருந்தார். அவருக்கும்அப்பெண்ணும் காதலித்துள்ளனர்.

இதையறிந்த தொழிலதிபர் தந்தை அவர்களை கண்டித்துள்ளார். இந்தபோதும் காதல் தொடரவே கடந்த 23ம் தேதி காலை பத்தரை மணிக்கு அருண்பாபு உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரே நிற்கையில் 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்ட அரிவாளுடன் துரத்தினர். அவர் அருகில் உள்ள மருந்தகத்துள் புகுந்தபோதும், அவரை விடாமல் தாக்கி அவரது வலது கை தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்  சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அருண்பாபு, தொழில் அதிபர் மகளை காதலித்ததால்தான், தன்னை 3 அடியாட்களை வைத்து கொல்ல முயற்சித்திருப்பதாக போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில், தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இந்த சம்பவம் தொடர்பான மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். திருச்சி தில்லைநகரில் பட்டப்பகலில் இச்சம்பவம்  நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

3

Leave A Reply

Your email address will not be published.