2019 – 2020 கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளியாக திருச்சியில் 3 பள்ளிகள் தேர்வு:

0
1

2019 – 2020 கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளியாக திருச்சியில் 3 பள்ளிகள் தேர்வு:

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் 2019 – 2020 கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளி தேர்வு செய்ய கட்டடம் ,கழிவறை, மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களின் திறன் , செயல்பாடுகள் என 15 வகையான பிரிவுகளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது .

இதில் திருச்சி, மாவட்ட சிறந்த பள்ளிகளாக 3 பள்ளிகளுக்கு கேடயம், அதில் திருச்சி மேற்கு கல்வி மாவட்டத்தில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டன .

2

இதை தொடர்ந்து 22.12.21 மாலை பள்ளி வளாகத்தில் திருச்சி மேற்குக் கல்வி மாவட்ட அலுவலர் ராஜேந்திரன், செந்தண்ணீர்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தனலெட்சுமியிற்கு கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பேசினார்.

அதை தொடர்ந்து மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ ஆகியோர் தலைமையாசிரியர் தனலெட்சுமியை பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள் .

இந்த நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் இரா.தமிழ்ச்செல்வன்,மேற்பார்வையாளர்கள் சரண்யா, முஸ்தபா, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் டி.தியாகராஜன் , செந்தண்ணீர்புரம் பாரதி மன்ற முரளிதரன் , விஸ்வநாதன் உள்ளிட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.