திருவெறும்பூர் உட்கோட்ட குற்றபிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நவல்பட்டு பகுதியில்,வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜான்பாட்ஷா (36) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்றும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் அவர் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவர, அவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையும் தொடர்கிறது..