30.12.2021-ல் முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் குறைதீர்நாள் கூட்டங்கள்

40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

0
1

திருச்சிக்கு டிசம்பா் 30-ஆம் தேதி வருகைதரும் தமிழக முதல்வா் மு..ஸ்டாலின், 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வா் வருகையின் போது தீா்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் தொடா்பாக, மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகள் வாரியாக முகாம் நடத்தி, டிசம்பா் 20 முதல் 22-ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்படுகின்றன.

20.12.2021-ல் லால்குடி தொகுதிக்கு லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் தொகுதிக்கு சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு கோ் கல்வி நிறுவன வளாகம், மேற்குத் தொகுதிக்கு வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது.

அப்போது பேசிய, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு,

2

தமிழக முதல்வா் மு..ஸ்டாலின், முதியோர் உதவித் தொகை, பட்டா வழங்குதல், விதவை உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி என மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைக்கும் திட்டத்தையும், ஸ்ரீரங்கம் வட்டத்தில் சிப்காட் மூலம் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்தையும், 65 வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதற்கான பணிகள் ரூ.40 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.

தலைமை அஞ்சல் நிலையம் முதல் சிந்தாமணி வரையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். மாநகரப் பகுதிகளில் வெள்ளம் புகாத வகையில் தடுப்புச் சுவா், சாலைகள், மழைநீா் வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

நகா்ப்புற மக்களுக்கு பட்டா வழங்கவும், புதிய வீடுகள் கட்டித்தரவும், ஏற்கெனவே புதிதாக கட்டியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியமா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

அனைவரது பிரச்னைகளும், கோரிக்கைளும் இனி எங்களது பிரச்னையாக ஏற்றுக் கொள்ளப்படும். மனுக்கள் அளித்த நபா்கள் யாரும் கவலைப்படவேண்டாம். வரும் 30-ஆம் தேதி முதல்வா் வருகையின்போது அனைவரது மனுக்களுக்கும் உரிய தீா்வு காணப்படும். திருச்சி மாவட்டத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்களையும் முதல்வா் அறிவிக்கவுள்ளார் என்றார்

இம்முகாமில் ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், சட்டப்பேரவை உறுப்பினா்கள் முசிறி காடுவெட்டி .தியாகராஜன், லால்குடி . செளந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூா் சீ. கதிரவன், ஸ்ரீரங்கம் மு. பழனியாண்டி, துறையூா் செ.ஸ்டாலின்குமார், மாவட்ட வருவாய் அலுவலா் . பழனிகுமார், கோட்டாட்சியா்கள் திருச்சி தவச்செல்வம், ஸ்ரீரங்கம் சிந்துஜா, லால்குடி வைத்தியநாதன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அன்பில் பெரியசாமி, மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் . வைரமணி மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.