திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்:

0
1

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்:

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் 7வது வார்டு அற்புதசாமிபுரத்தில் வசிக்கும் ஏழை ஹரிஜன விவசாயிகள் 92 பேருக்கு வீட்டுமனைகள் தாசில்தார்கள் நாராயணசாமி மற்றும் தாஸ் சுப்பையா அவர்களால் கடந்த (18.08.1966)-ல் இலவசமாக வழங்கப்பட்டது‌.

ஆனால் விவசாயிகளுக்கு சர்வே ரெக்கார்டுகளில் பெயர்கள் பதிவு செய்து தரப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தில் இருந்து வந்துள்ளனர்.

2

இதனை கண்டித்து விவசாயிகள் சர்வே ரெக்கார்டுகளில் பட்டாதாரர் பெயர்களாக பதிவு செய்து தரக்கோரி பல முறை அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகளுக்கு அடங்கல் தர மறுக்கும் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்தி வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கை ஏற்க மறுக்கும் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியை கண்டித்து இன்று (20/12/2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்‌.இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த போலீசாரால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.