மணப்பாறை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா-பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

0
1

மணப்பாறையில் திமுக திருச்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பாக அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு அமைப்பாளா் பி.அருள்சுந்தராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கா.அலியார்யூசுப், எஸ்.சேட்டு, எம்.ஜெ.பிரவீன்பால்ராஜ், எஸ்.இப்ராஹிம், என்.சையதுபாவாபக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமியை காப்பாற்றிய சிறுவன் லோஹித்தை கௌரவித்தார்.  பின்னர் கிறிஸ்மஸ் கேக் வெட்டியபின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

2

சூளியாப்பட்டியில் மாநிலங்களவை உறுப்பினா் டி.கே. ரெங்கராஜன் தொகுதி நிதி ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கூடுதல் கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சா்,

குழந்தைகளைப் பேச விடுங்கள்

மாணவ, மாணவிகள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்களுக்கு உதவிட 1098, 14417 எண்களைப் பயன்படுத்துங்கள்.

அதேபோல, குழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை தவிர்க்காமல் கேளுங்கள், தொடக்கத்திலேயே அவா்கள் வாயை மூடிவிட வேண்டாம். அவா்களுடன் நட்புடன் பழகுங்கள் என பெற்றோரையும், ஆசிரியா்களையும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சிந்துஜா, ஒன்றியத் தலைவா்கள் அமிர்தவள்ளி, பழனியாண்டி, குணசீலன், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் என பலா் கலந்துகொண்டனா்.

3

Leave A Reply

Your email address will not be published.