பேருந்தில் வியாபார பொருட்களுக்கு கட்டண விலக்கு கோரி திருச்சியில் பார்வையற்ற சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்:

பேருந்தில் வியாபார பொருட்களுக்கு கட்டண விலக்கு கோரி திருச்சியில் பார்வையற்ற சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்:
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (20/12/2021) திருச்சி மாவட்ட பார்வையற்ற சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்துஅவர்களிடம் கேட்டபோது:

அரசு ஆணைப்படி வெளியூர் பேருந்துகளில் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயணிக்க உத்தரவாதம் வழங்க வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் பயணத்தின்போது வாழ்வாதார தேவைக்காக கொண்டு செல்லும் ஊதுபத்தி மற்றும் இதர வியாபாரப் பொருட்களின் சுமை பைகளுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்ற 2 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது நடத்துனர் மட்டும் ஓட்டுனரால் மரியாதைக் குறைவாக நடந்தப் படுவதாகவும், சில சமயங்களில் தாக்கப்படுவதாகவும், மற்றும் மாற்றுத்திறனாளிகள் எடுத்துச்செல்லும் ஊதுபத்தி உள்ளிட்ட வியாபாரப் பொருட்கள் அடங்கிய சுமை பைகளுக்கு முழு கட்டணம் வசூல் செய்வதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இந்த 2 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உத்திரவாத புதிய சிறப்பினை வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சமூகத்தினர் தெரிவித்தனர்.
