முசிறி காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர்

அரைமணி நேரத்தில் பிடிபட்டார்

0
1

திருச்சி மாவட்டம், முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் காவிரி பெரியார் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  ஒருவாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தார்.

அவரை முசிறி போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், அவர் நாமக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (19) என்பதும், முசிறி பகுதியில் கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரியவர, அவரை கைது செய்து போலீஸ் நிலைய வளாகத்தின் உள்ளே அமர வைத்திருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அவர் தப்பி ஓடி தலைமறைவானார்.  உடனே பல்வேறு இடங்களில் தினேஷ்குமாரை தேடினர். பின்னர் முசிறி அருகே உள்ள அந்தரபட்டி பகுதியில் அவர் பதுங்கி இருப்பதை அறிந்தபோலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தினேஷ்குமாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

2

போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபரை அரைமணி நேரத்திற்குள் போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.